ஒரு சைக்கிள் கூட வாங்க முடியலன்னு கவலைப்பட்ட இளைஞரை பார்க்க மாறுவேடத்தில் தேடிச் சென்ற நடிகர் பாலா.
சென்னையில் சமீபத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு நபர் இந்தியன் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். ஒரு நாள் வழக்கம் போல பெட்ரோல் போட்டு இருக்கும்போது ஒரு YouTuber தனது ஹெல்மெட்மேல் கேமரா வைத்திருந்தார்.
அந்த கேமரா என்ன விலை என்று கேட்க அந்த யுடுபரோ 40 ஆயிரம் ரூபாய் என்று சொல்ல அந்த நபர் வீட்டில் ஒரு சைக்கிள் கூட வாங்கி தர முடியாத தருணம் இருக்கிறது நீங்கள் இவ்வளவு விலைமதிப்புள்ள கேமராவை அணிந்திருக்கிறீர்கள் என கவலையோடு பேசிய தருணத்தை அந்த YouTuber தனது வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
அந்த வீடியோவை இணையதளத்தில் லட்சக்கணக்கான மக்கள் அதை பார்த்து பகிர்ந்துள்ளார் அந்த வீடியோவை நடிகர் பாலாவும் கண்டு கண்கலங்கிய தருணத்தில் அவருக்கு அதிர்ச்சி ஊட்டும் வகையில் அவரை சந்தித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு விஜய் டிவி நடிகர் பாலா மாறுவேடத்தில் சென்னையில் மேல்மருவத்தூர் என்ற இடத்தில் அந்த நபரை சந்திக்க, ஒரு புது பைக்கை வாங்கிக்கொண்டு அவருக்கு அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என்று ஓட்டிச் சென்றார்.
அந்த பெட்ரோல் பங்கில் அந்த நபரின் கையால் பெட்ரோலை நிரப்பி பிறகு இறங்கி அந்த புது பைக்கின் சாவியை கையில் கொடுத்து அவரது முகமூடியை கழட்டிய போது அந்த நபர் அதிர்ச்சியில் அவரை தழுவி அன்பை பரிமாறி அந்த அன்பளிப்பை பெற்றுக் கொண்டார்
நடிகர் பாலா கடந்த சில நாட்களாகவே அவரது வருமானத்தில் பொதுமக்களுக்காக தனது பங்கை பகிர்ந்து வருகிறார். ஏழைகள் எப்போதும் கஷ்டத்தில் இருக்கும் அந்த தருணத்தில் நடிகர் பாலா அவரது இரு கரங்களையும் நீட்டி உதவி செய்து கொண்டு வருகிறார்.
அந்த மனசு தாங்க கடவுள்:
சமீபத்தில் ஆபத்து சமயங்களில் பலரது உயிர்கள் சில நொடிகளிலேயே தெரியும் அந்த தருணம் அந்த குடும்பத்தினருக்கு மிகவும் துக்கத்தை ஏற்படுத்தும் அந்த ஒரு சம்பவங்களை குறைப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் சில வாகனங்களை மக்களுக்காக அன்பளிப்பாக அவரது சம்பளத்தில் வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அல்லது அரசியலிலும் பல முக்கிய பிரபலங்கள் இருக்கும் இடம் கூட தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள் அப்படிப்பட்ட நபர்களுக்கு மத்தியில் வளர்ந்து வரும் நடிகர் பாலா அவருடைய சம்பளத்தில் மக்களுக்காக பெரும் உதவிகளை செய்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் நடிகர் பாலா செய்து வரும் பல உதவிகளுக்கு பொதுமக்களும் நடிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.
நடிகர் பாலா அந்த பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் நபரின் கஷ்டத்தை உணர்ந்து அவருக்கு ஒரு புது பைக்கை வாங்கி தருகிறார் இந்த ஒரு செய்தி அவரது உறவினர்களோ நண்பர்களோ செய்திருக்கலாம் ஆனால் நடிகர் பாலா யாருன்னே தெரியாத ஒருவருக்கு உதவி செய்வது அந்த ஒரு நல்ல மனம் தான் கடவுள்.
மக்களே நடிகர் பாலா செஞ்சிட்டு வர இந்த உதவி தொடரட்டும் என வாழ்த்துங்கள் நடிகர் பாலாவை பிடித்திருந்தால் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்.