சிவகார்த்திகேயன், 1985 பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ்நாட்டின் சிங்கம்புணரியில் பிறந்தார். கல்லூரி நாட்களில் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன் திறமையை வெளிப்படுத்தி, “கலக்க போவது யாரு” என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு பலரின் மனதை கவர்ந்தார்.
அங்கு இருந்து ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கினார். தொகுப்பாளராக இருந்தபோதே, சினிமாவுக்கு செல்வது அவருடைய கனவு. 2012-இல் “மெரினா” மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
ஆரம்பத்தில் சுமாராக இருந்தாலும், “எதிர் நீச்சல்” படம் (2013) அவருடைய வாழ்வில் பெரிய திருப்புமுனை. அதற்கு பிறகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, போன்ற பல வெற்றிப்படங்கள் வந்துகொண்டே இருந்தன.
சிவகார்த்திகேயன் வெறும் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல், “வேலைக்காரன்” போன்ற படங்களில் சமூக உணர்வுடன் தன் திறமையை நிரூபித்தார்.
அதுவும் மட்டும் இல்லாமல், தனது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மூலம் படங்களை தயாரித்து, புதுமுகங்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்துவருகிறார்.
தன்னுடைய ரசிகர்களுடன் உண்மையான உறவினால் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பது அவரது வெற்றியின் ரகசியம். இனி வரும் காலங்களில் இன்னும் நிறைய வெற்றி படங்கள் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் மிகவும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. யாருக்கெல்லாம் சிவகார்த்திகேயன் பிடிக்குமோ? கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்!
சிவகார்த்திகேயன் என்பது வெற்றி, உழைப்பு, பாசம் ஆகியவற்றின் ஒருமித்த வடிவம்..!